Menu 1
தமிழ்நாடு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர்
செயற்குழுவில் துவக்க விழா
அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம்......
03.03.2024 அன்று நடைபெற்ற செயற்குழுவில் துவக்க விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் முன்னாள் விடுதி மாணவருமான எழுச்சித்தமிழர் தொல் . திருமாவளவன் அவர்களை சந்தித்து துவக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்தோம் .
அதனை ஏற்றுக்கொண்டு தலைவர் அவர்கள் ஒப்புதல் தந்துள்ளார்கள்.
10.03. 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகின்ற துவக்க விழா ஏற்பாடு குறித்து நேற்று இரவு நிர்வாக குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் இணைய வழி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இங்கே நான் பதிவிட விரும்புகிறேன்.
-------------------
1. சைதாப்பேட்டை வர்த்தகர் அறக்கட்டளையில் குறைந்தபட்சம் 300 பேர் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்காக நிர்வாக குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தலா 10 முன்னாள் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. மண்டப வாடகை மதிய உணவு உள்ளிட்ட இதர செலவுகள் அனைத்தும் சேர்த்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தாண்டுகிறது.
இப்பணத்தை அனைவரும் பங்களிப்பு செய்யும் விதமாக நிர்வாக குழு உறுப்பினர் தலா ரூ. 3000 எனவும்
செயற்குழு உறுப்பினர்கள் தலா ரூ 1000 எனவும்
உறுப்பினர்கள் தலா ரூ 500 எனவும் பங்களிப்பு தொகையை பொருளாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
3.எவ்வித இடர்பாடுகள் இல்லாமல் நிகழ்ச்சியை செழுமையாக நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அதே வேளையில் நமது வாட்ஸ் அப் குரூப்பில் தொடர்பு இல்லாதவர்களை வெளியேற்றுகின்ற வேளையை செய்ய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
4.நிர்வாக குழு செயற்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களிப்பு தொகையான ரூ. 3000 ,ரூ. 1000 மற்றும் ரூ 500 உடனடியாக பொருளாளர் கூகுள் பே எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
---------------------------------------------------
பேராசிரியர் எ.தமிழ்குமரன் பொருளாளர்.